கணவனோ மனைவியோ சில வருடங்களில் வேறு ஒரு கள்ளதொடர்பு வைத்து கொள்கிறார்கள். அதற்கு நேரடியாக உன்னை பிடிக்கவில்லை விவாகரத்து செய்துவிட்டு வேறு வாழ்க்கை அமைத்து கொள்ளலாமே? எதற்கு இந்த நம்பிக்கை துரோகம்?

கணவனோ மனைவியோ சில வருடங்களில் வேறு ஒரு கள்ளதொடர்பு வைத்து கொள்கிறார்கள். அதற்கு நேரடியாக உன்னை பிடிக்கவில்லை விவாகரத்து செய்துவிட்டு வேறு வாழ்க்கை அமைத்து கொள்ளலாமே? எதற்கு இந்த நம்பிக்கை துரோகம்?


கணவனோ மனைவியோ சில வருடங்களில் வேறு ஒரு கள்ளதொடர்பு வைத்து கொள்கிறார்கள். அதற்கு நேரடியாக உன்னை பிடிக்கவில்லை விவாகரத்து செய்துவிட்டு வேறு வாழ்க்கை அமைத்து கொள்ளலாமே? எதற்கு இந்த நம்பிக்கை துரோகம்?


நடுத்தரக் குடும்பங்களின் தற்போதைய எண்ணங்கள். ஒருத்தொருக்கொருத்தர் சார்ந்து இருந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, பெற்றோர்களையும் கவனித்து , உற்றார் உறவினர், சாதி அமைப்புகளின்படி வாழ்ந்து முடிப்பது.

ஆணாதிக்கம் இருந்த காலங்களில் கேட்க முடியவில்லை. வசதி படைத்த ஆண்கள் கள்ளத்தொடர்பு, சின்ன வீடுகள் சகஜம். முதல் தாரம் குடும்ப தலைவி. மரியாதை. அதனால் பெண்கள் கண்டிக்கும் அளவுக்கு போக முடியவில்லை. தற்போது சமநிலைகள். பொருளாதார வளர்ச்சி. பெண்களும் சம்பாதிக்கிறார்கள். கல்யாணத்துக்கு முன்பு ஆண்-பெண் கன்னித்தன்மை கேள்விக்குறிகளே. நாகரீகம் மாறுகிறது. பெற்றோர்களை ஏன் வெறுக்கிறார்கள் ? சேர்ந்து வாழ மறுக்கிறார்கள் ? இந்தக் கேள்வியை பெண்கள் சிந்திப்பதில்லை.

திருமணமாகி சில ஆண்டுகளில் குழந்தை பிறந்தவுடன், முதல் உரசல் ஆரம்பமாவது 70% நடுத்தரக் குடும்பங்களில் , பெற்றோரிடமும் இருந்து தனியாக பிரிய மனைவி, கணவனை நச்சரிப்பதே. உறவு உராசல் ஏற்பட பெற்றோர்களே முதல் காரணம். அதனால் உறவு விரிசல் உண்டாகி வீடுகளில் கலகம் ஏற்படுகிறது. 

அதற்காகத்தான் பெரும்பாலும் வெளியூரில், நாடுகளில் வேலை பார்க்க ஓடுகிறார்கள். ஜாலியாக இருப்போமே, என்ன தப்பு. பிள்ளைகள் பெரிசான பிறகு திரும்பலாம். பெரிசுகள் கிழடுகள் கிடக்கட்டும். முதியோர் இல்லங்கள் தென்னிந்தியாவில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துவிட்டன.

விவாகரத்து என்பது வந்ததே 1955 சுதந்திர இந்தியாவில். 1950ல் அரசியல் சட்டம், 55ல் இந்து குடும்ப சட்டமைப்பு வந்தது. அதாவது உங்கள் தாய், தந்தையர் காலங்களில்தான்.

மியூசல் அதாவது ஒருமனதாக இருவரும் ஒத்துக் கொண்டு பிரிகிறோம். உனக்காச்சு எனக்காச்சு. ரெடி. 30 நாட்கள். பிரிந்து போயிணிக்கினு இருக்கலாம். ரெடியா,

ஜீவனாம்சம் கொடு. பணம் வாங்கி மறுமாதமே மறுமணங்கள் ஆவதை பார்த்து இருக்கிறேன்.

கன்டஸ்ட்டு டைவர்ஸ் இருவரும் அங்கேயும் கோர்ட்டில் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் ஜென்மத்துக்கு டைவர்ஸ் ஆகாது. நீதிபதி 10 நிமிடத்துக்கு ஒரு கேஸ்ஸை சும்மா ஏறிட்டு பார்ப்பார், ஓகே அடுத்த மாதம் வாங்க. அவ்வளவுதான்.

உங்களது தாய்தந்தையர் டைவர்ஸ், கோர்ட்டு பிரியணும்னு நினைத்துப் பார்த்தார்களா ? ஏன் இல்லை. சிந்தித்தீர்களா ? குழந்தையின்மை, பொருளாதாரம், ஏற்றத்தாழ்வுகளை அனுசரித்து கடந்து வந்தார்களா ?

அதனால் வாழ்க்கையை இருவரும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போவணும். கன்னித்தன்மை, கள்ள உறவு, பெற்றோர்களின் தொந்தரவு, ஆடம்பரம் போன்றவைகளின் Definition வரையறுத்தல் காலங்களுக்குத் தக்க மாறுகின்றன, மாற்றத்துக்கு தக்க அனுசரிப்பதே வாழ்க்கை.

அரை மணி நேரம் வீட்டை விட்டு வெளியே கைகோர்த்து அல்லது உரசி நடந்து செல்லுங்கள். மனதார நடுநிலைமையாக பேசுங்கள். அடுத்தவர்களை கோள் சொல்லாதீர்கள். மற்றவர்களை குறை பேசி புகார்கள் கூறாதீர்கள். உங்களைப்பற்றி மட்டும் பேசி நடந்து வெளிக்காற்றை சுவாசியுங்கள். பல மனிதர்களை இயற்கையை பாருங்கள். வீட்டுக்கு திரும்புங்கள். புதிய உணர்வு , மாற்றங்கள் தெரியும்.
Previous Post Next Post

نموذج الاتصال